பேருந்து வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள், உடனடியாக பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு!!

கோவை,மாவட்டம்,பெரியநாயக்கன் பாளையம், பேரூராட்சிக்கு  உட்பட்ட, 18 வது வார்டில், சுமார் 1800க்கும் மேற்பட்ட வீடுகள், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டு, 1800க்கும் மேற்பட்ட வீடுகளில், பொதுமக்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு வருட காலமாக அரசு பேருந்து எதுவும் இயக்கவில்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள், வேலைக்கு செல்லும் ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதே போல வயதானவர்கள், மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவமனை செல்வதற்கும் பேருந்து, இல்லாத நிலையில் வசித்து  வருகிறார்கள். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே, போக்குவரத்து துறை அமைச்சராகிய நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, துரித நடவடிக்கை எடுத்து, விரைவாக இங்கு குடியிருக்கும் மக்களுக்காக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று மக்களின் சார்பாக, தமிழ்நாடு பனைத் தொழிலாளர் மற்றும் அனைத்து உடலுழைப்பு கட்டுமான பொது தொழிலாளர் நல வாரிய சங்கத்தின் சார்பில், இதன் மாநில பொதுச் செயலாளர் எஸ் மாரியப்பன் கோரிக்கை மனு அளிப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!