சுகாதாரமற்ற நிலையில் உள்ள மீமிசல் பேருந்து நிலையம்!!
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல்பேருந்து நிலையத்திற்கு சென்னை புதுச்சேரி போன்ற பகுதியில் இருந்தும் ராமேஸ்வரம், தூத்துக்குடி செல்லும் சாலையில் இந்த பேருந்துநிலையம் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று தான் செல்கின்றன. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பேருந்து நிலையத்தில் அனைத்து இருக்கைகளும் உடைந்த நிலையிலும் அங்கும் இங்கும் குப்பைகளாகவும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் இதை சரி செய்யுமா ?இல்லையேல் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுப்பாரா?இந்த அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது பர்தேஸ் இந்தப் பகுதியை பார்வையிடுவாரா? சமூக ஆர்வலர்களின் கேள்விக்கணையாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக