பேரணாம்பட்டு அருகே மேச்சலில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆடுகள் திருட்டுஆடு திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் திருடப்பட்ட ஆடுகள் காவல் நிலையத்தில் வைத்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு!!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எல்.ஆர் .நகர் பகுதியை சேர்ந்தவர் நபீஸ் இவர் தனது வீட்டின் அருகில் ஆடுகளை மேச்சலில் விட்டு உள்ளார். மேச்சலில் ஈடுபட்டிருந்த ஆடுகள் திடீரென கத்தவே சந்தேகம் அடைந்த ஆட்டின் உரிமையாளர் நபீஸ் வெளியே வந்து பார்த்த போது இரண்டு நபர்கள் ஆடுகளை இருசக்கர வாகனத்தில் திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்  இது குறித்து உடனடியாக நபீஸ் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பேரணாம்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை திருடியது கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த அஜித் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது இதையடுத்து திருடிய இரண்டு ஆட்டை கைப்பற்றி ஆடுகளைத் திருடிய   அஜித்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் திருடப்பட்ட ஆடுகளை காவல் நிலையத்தில் வைத்து உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!