கோயம்புத்தூர் சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா!!



கோயம்புத்தூர் சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் நலன் கருதி, மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று இந்தத் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளை, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் தலைவரும், நிர்வாக இயக்குநரும், மற்றும் உயிரின் சுவாசம் அறக்கட்டளையின் நிறுவனருமான Dr. க. மாதேஸ்வரன், M.Ch., அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்."சுற்றுப்புறத் தூய்மை!! ஆரோக்கிய வாழ்வு!!" என்ற உன்னத நோக்கத்தோடு, பள்ளி மாணவர்களிடையே தூய்மையையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ராயல்கேர் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!