மூணார் நல்ல தண்ணி எஸ்டேட்டில் படையப்பா யானை வீட்டின் முன்புறம் நின்ற காரை சேதப்படுத்தியது!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் நல்ல தண்ணி எஸ்டேட்டில் படையப்பா யானை வீட்டின் முன்புறம் நின்ற காரை சேதப்படுத்தியது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான நல்லதண்ணி எஸ்டேட்டில் இரவு நேரத்தில் படையப்பா யானை வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்த காரை சேதப்படுத்தியது. தற்பொழுதும் யானை மக்கள் வசிக்கும் பகுதிகள் தான் சுற்றி திரிவதாகவும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக