குடியாத்தத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை அமைச்சர் ஆய்வு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயத்திற்குப் பிறகு நெசவாளர்கள் தான் இந்த நாட்டின் கண்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து வகையான பணிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்
போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு சங்கங்களை நடத்துவர் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கைத்தறி அமைச்சர். விஜய் பாலாஜி குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் உள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்து, தென்றல் குமார், வினோத் கண்ணன், சுதாகர் கோட்டாட்சியர். சுபலட்சுமி உதவி இயக்குனர். விஜயலட்சுமி வட்டாட்சியர். பிரியா நகராட்சி ஆணையாளர். தனலட்சுமி உதவி செயற்பொறியாளர். சீனிவாசன் மற்றும் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வேல்முருகன். நகர செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் கைத்தறி பூங்காவில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் நெசவாளர்களிடம் அமைச்சர் விஜய் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளிடம் பேசிய அமைச்சர். விஜய் பாலாஜி:
துறை சார்ந்த ஆய்வுக்காக கைத்தறி துறை இரக்கமாக சென்றுள்ளது அதை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்
கண்டிப்பாக விவசாயத்திற்கு பிறகு நெசவாளர்கள் தான் தமிழ்நாட்டுடைய கண்கள் என்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு என்னென்ன வழிவகை செய்ய வேண்டுமோ நிச்சயமாக அதை அரசு செய்யும்
லுங்கி உற்பத்தி செய்பவர்களுக்கு வருமானம் குறைவாகவும் சேலை செய்பவர்களுக்கு அதிகமாகவும் இருக்கிறது இதை கலந்து ஆலோசித்து நடவடிக்கை கைதறி கூலி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு சங்கங்களை நடத்துவர் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் உண்மையான நெசவாளர்களுக்கு உண்டான ஊதியம் இந்த அரசு கொண்டு செல்லும் பொங்களுக்கு தரப்படும் புடவை வேஷ்டி கைத்தறையில் நெசவு செய்வதற்காக கைத்தறிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்படும் என அமைச்சர் விஜய பாலாஜி தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக