அரக்கோணம் - திருவலாங்காடு இடையே சிறப்பு பேருந்து சேவை துவக்கம்!அமைச்சர் காந்தி ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், அரக்கோணம் முதல் திருவலாங்காடு வரை சிறப்பு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த சேவையை அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சருமான  காந்திராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் 

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஜூன் 13 முதல் 24 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சென்னை - அரக்கோணம் மற்றும் அரக்கோணம் - சென்னை இடையே இயக்கப்படும் பல மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சில மின்சார ரயில்கள் திருவலாங்காடு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.இதனால் தினசரி வேலை, கல்வி மற்றும் தொழில் நிமித்தமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து திருவலாங்காடு வரை சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி ராஜ் பங்கேற்று சிறப்பு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்து பயணிகளிடம் சேவையின் பயன் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது பேருந்தின் நடத்துனருக்கு பிறந்தநாள் என்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அமைச்சரின் இந்த செயல் அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மேலும், ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சிறப்பு பேருந்து வசதி குறித்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அடிக்கடி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை இந்த சிறப்பு பேருந்து சேவை தொடர்ந்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!