குடியாத்தம்:கௌதம் பேட்டை கெங்கையம்மன் சிரசு திருவிழா- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கௌதம்பேட்டை கஸ்பா பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆணி மாதம் ஒன்றாம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்இந்நிலையில் இன்று ஆணி ஒன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது முன்னதாக பெண் குளக்கரை பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்ததது இந்த கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தில் பக்தர்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர் வழி நெடுங்கிலும் சூரத் தேங்காய் உடைத்தும் சிலம்பாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுபுற கலை நிகழ்சிகளுடன் அம்மன் சிரசு ஆலயம் கொண்டு வரப்பட்டதுபின்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் கண்கள் திறக்கப்பட்டதுகெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக