கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள என்.ஜி. மருத்துவமனையில், புதிய சிறப்பு சிகிச்சை மையங்களின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நவீன பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்!!



கோவை சிங்காநல்லூர் பகுதியில், என்.ஜி. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு, அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய சிறப்பு பிரிவுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கப்பட்டுள்ளது. 'சுகம் குடல் மற்றும் பெருங்குடல் சிறப்பு சிகிச்சை மையம்' மற்றும் 'மேம்படுத்தப்பட்ட நீரிழிவு பாத மருத்துவம் மற்றும் புண் பராமரிப்பு சிகிச்சை மையம்' ஆகிய இந்த புதிய பிரிவுகளை, 'வி தி லீடர்ஸ்' அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை திறந்து வைத்தார். என்.ஜி.மருத்துவமனையின் தலைவரும் இரைப்பை குடல் மருத்துவருமான டாக்டர் மனோகரன், தேன்மொழி, டாக்டர்.நிதிஷ் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.குடல் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை நோய் பாத பராமரிப்புக்கான முழுமையான மருத்துவ வசதிகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதே இந்த புதிய மையங்களின் முக்கிய நோக்கமாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறியதாவது. 


இன்றைய நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் தரம் குறைந்து வருவதும், பாக்கெட் உணவுகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உட்கொள்வதும் மனித உடலில் செரிமான மண்டலத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன. இதன் விளைவாக, சாதாரண செரிமானக் கோளாறுகள், கேஸ் தொந்தரவுகள் முதல் குடல் புற்றுநோய் வரை பல்வேறு தீவிரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் 'பிரிவென்டிவ் ஹெல்த்கேர் முறையின் முக்கியத்துவம் தற்போது உலகளவில் அதிகரித்து வருகிறது. மேலை நாடுகளில் பரவலாக இருக்கும் இந்த விழிப்புணர்வு, தற்போது நம் நாட்டிலும் மெல்ல தொடங்கப்பட்டுள்ளது. பிரச்னைகள் தீவிரமடைந்து லட்சக்கணக்கில் பணம் செலவழிப்பதை விட, ஆரம்ப நிலையிலேயே உடலின் தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டறிந்து தற்காத்துக் கொள்வது அவசியமாகிறது என்று கூறினார்

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!