தேனி மாவட்டம் இராணுவ வீரர் அ. மீனாட்சி சுந்தரம் கீர்த்தி சக்ரா விருது பெற்றார்!!

தேனி மாவட்டம், காமயகவுண்டன் பட்டியை சேர்ந்த அ . மீனாட்சி சுந்தரம் கீர்த்தி சக்ரா விருது பெற்றார். கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவும், தியாகத்திற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரை மேலும் கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில், ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் அசாதாரண வீரத்தைப் பாராட்டி, ரூ.48 லட்சத்திற்கான காசோலையை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வழங்கியிருக்கிறார்.ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வீரமரணம் விளைவித்த தீரச்செயலுக்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய peacetime gallantry விருதான 'கீர்த்தி சக்ரா' விருதை இவர் பெற்றுள்ளார்.கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரூ.48 லட்சம் காசோலையை வழங்கிப் பாராட்டினார்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!