வாலாஜாபேட்டை அருகே அரசுப் பேருந்து நிறுத்தாமல் சென்றதால் கிராம பெண்மணி தனது ஸ்கூட்டியை வேகமாக எடுத்துக் கொண்டு அரசு பேருந்து முன்பாக நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!!
தமிழகத்திலுள்ள கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து புகார்கள் எழுகின்றன சமீபத்திய உதாரணங்களாக ஆற்காடு வாலாஜாபேட்டை சிப்காட் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் சென்றதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வயதானவர்கள் என அனைவரும் அவதிப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன..
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று அப்பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர் அப்போது பாணவரத்தில் இருந்து முக்கிய வழித்தடமாக ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்து செங்காடு பேருந்து நிறுத்தத்தில் கிராம பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தும் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து ஓட்டுநர் அலட்சியத்துடன் பேருந்து வேகமாக ஓட்டி சென்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம பெண்மணி ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் வேகமாகச் சென்று பேருந்து முன்பாக நிறுத்தி ஏன் பேருந்தை நிறுத்தாமல் செல்கிறீர்கள் எதற்கு இப்படி செய்கிறீர்கள் என்று பேருந்து ஓட்டுநரிடம் ஏன் கடுமையான கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
எனவே இதுபோன்ற தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக