திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழச்சி!!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவில் சண்முக விலாசம் மண்டபம் முன்பு அர்ச்சகர்கள் கோவில் பணியாளர்கள் காவலாளிகள் 10 வருடம் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக தரிசனத்திற்கு அனுமதிப்பதாக பல்வேறு புகார் எழுந்தது . இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும் விளங்குவதால் விசேஷ நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். இதனால் ஏற்படும் நெரிசலைத் தாரகையாகக் கொண்டு நீண்டகாலமாக சில முறைகேடுகள் புகாராக எழுந்த வண்ணம் இருந்தன.குறிப்பாக சண்முக விலாச மண்டபம் முன்பாக அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சில வழிகளில் பக்தர்களை முறைகேடாக அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தன. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களைத் தவிக்கவிட்டு விட்டு பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டது. இது நீண்டகாலமாக பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. தற்போது அந்த நிலை மாறியதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக