கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு, அரசால் வழங்கபடும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க வேண்டும் என்று தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!


கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இதன் மாநில துணைத்தலைவராக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான, புஷ்பானந்தம் இருந்து வருகிறார். இவரது தலைமையில் இன்று, பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பதாகைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள், மனுக்களாக எழுதி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் புஷ்பானந்தம் கூறியதாவது.. கோவை மாவட்டத்தில் நெம்பர் 24, வீரபாண்டி கிராமத்தில், ஏக்கர் கணக்கான புறம்போக்கு இடங்கள் உள்ளது. குறிப்பாக கா.சா எண் 125/1 இல் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பொறம்போக்கு இடங்கள் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக,  இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதி பேருக்கு பட்டா கொடுத்துள்ளனர். பாதி பேருக்கு பட்டா கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கொடுக்கப்படாமல் உள்ள பொதுமக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்களை வழங்க முன்வர வேண்டும், வீட்டுமனை பட்டா கொடுத்தவர்களுக்கு அந்த பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து, உடனடியாக அவர்கள் தங்களது வீடுகளை கட்ட உதவி புரிய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக கோவை தடாகம் சாலை, வேலாண்டிபாளையம், பன்னிமடை, கணபதி, கவுண்டம்பாளையம்அசொக்நகர், போன்ற பகுதியை சேர்ந்த மக்கள் இன்றுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், பலமுறை வீட்டு மனை பட்டா அலைந்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, தாழ்த்த பட்ட சமூக ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை கொடுக்க முன்வரை வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, திவ்யா, பால்ராஜ், ரம்யா, அமுல் ராஜ், செல்வராஜ், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!