தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர். மரிய வில்சன்!!
தமிழக அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்வு.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 1,28,934 ரூபாயாக உள்ளது.
வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட கடும் உச்சம். முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கியுள்ளது.
அரசு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்துகிறது. கனிம வளத்துறையில் நடந்த ஊழல், வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.
அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் GST குறைவாக உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை.
மாநில GDPயில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிவு.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையால் கூடுதல் செலவு.
2021-26 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த ஐந்தாண்டு கால கடனானது, தமிழகம் சுதந்திரத்துக்கு பின் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிகம்.
வட்டி, சம்பளம், ஓய்வூதியத்திற்காக மொத்த நிதியில் 64% செலவு. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி.
மாநிலத்தின் திட்டங்களுக்கு 13% மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன். போக்குவரத்து கழகத்திற்கு மொத்த இழப்பு ரூ.72,667 கோடி
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக