தன்னை யாரோ ஆட்சியமைக்க விடாமல் தடுத்ததாகத் திருச்சியில் மேடையேறி முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் விஜய்!!


* உற்றுப் பார்த்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் (Constitution) என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை என்பது அவரது பேச்சிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது.

* உண்மையிலேயே உங்களுக்குத் திராணி இருந்தால், ஆளுநரிடம் நீங்கள் அளித்த உரிமைகோரல் கடிதங்களை முதலில் மக்கள் மன்றத்தில் வெளியிடுங்கள்! 

* எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்ற பதவிவெறியில் நீங்கள் அரங்கேற்றிய தகிடுதத்தங்களை நாடறியும்!

* காரில் அரங்கேறிய அரசியல் அசிங்கம்: அமமுக உறுப்பினர் திரு. காமராஜ் அவர்களைக் காரில் வைத்து அவசரகதியில் கையெழுத்து வாங்கியதும், அந்தக் காணொளியை உங்கள் கட்சியினரே சமூக வலைத்தளங்களில் பரப்பி அது அம்பலமானதும் தான் உங்கள் நேர்மையா?

* பச்சையான குதிரைபேரம்: இதுவரை தமிழ்நாடு அரசியலில் யாரும் செய்யத் துணியாத வகையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுகவின் ஒரு தரப்பினரைச் சந்தித்து, அவர்களைக் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கச் செய்த திரைமறைவு வேலைகளைச் செய்தது யார்? 

* இதுதான் நீங்கள் மேடைதோறும் முழங்கும் நேர்மையின் இலக்கணமா? 

* இத்தனை அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது!

* முதல் நாளே மக்கள் தீர்ப்பை மதித்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று நெஞ்சை நிமிர்த்தி, 

* அதிகாரப்பூர்வமாக அறிவித்த எங்கள் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் அறம் எங்கே? 

* முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பின்பும் உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?

* *வாட் புரோ இது ராங் புரோ...?*

* சமுக ஊடங்களில் வைரல் 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!