நிலவன் டிவியின் தலைப்புச் செய்திகள்!!


நிலவன் டிவியின் தலைப்புச் செய்திகள்!! 

📰 தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கணிசமாக குறைந்துவரும் சூழலில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை.. வாணியம்பாடியில் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்த நீர்

📰 பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வலுக்கும் போராட்டம்.. திருவாரூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் த.வெ.க. அரசைக் கண்டித்து விவசாயிகள் முழக்கம்

📰 கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை கோயிலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளி வாள் வழங்கி சிறப்பு வழிபாடு.. தமிழ்நாட்டில் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து, முதலமைச்சராக சென்று விஜய் சாமி தரிசனம்

📰 கர்நாடகா சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், காவிரி நீரை கொண்டுவருவாரா என திமுக கேள்வி.. தேர்தலுக்கு முன்பே த.வெ.க. உடன் ரகசிய உறவில் இருந்த காங்கிரஸ் ஆட்சியே கர்நாடகாவில் நடப்பதாக சாடல்

📰 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12-ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை.. குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது என விவசாயிகள் வேதனை

📰 காவிரி நீருக்கு வழியில்லாமல் குறுவை சிறப்பு தொகுப்பு அறிவிப்பதா என திமுக கேள்வி.. பொய்க்கால் குதிரை அரசின் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

📰 உத்தரப்பிரதேசத்தில் ஜே.சி.பி. வாகனத்தில் மணமகன் உள்ளிட்டோர் திருமண ஊர்வலம்.. போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை..

📰 கர்நாடகா கலபுரகியில் அரசுக் கல்லூரி வகுப்பறையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. காயமடைந்த 5 மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி

📰 உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்து எலான் மஸ்க் மாபெரும் சாதனை.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகளால், 100 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பைத் தாண்டி அசத்தல்

📰 அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகிறது.. மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் லெபனானும் இடம்பெறும் என அமெரிக்க தரப்பு தகவல்


தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!