குடியாத்தம் பேருந்தில் இளம் பெண்ணிடம் சிலுமிஷசத்தில் ஈடுபட்ட முதியவர் கைது!!
சென்னையை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் நேற்று முன்தினம் இரவு குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வேலூரில் இருந்து குடியாத்தத்திற்கு தனியார் பஸ்ஸில் பயணம் செய்து உள்ளார். அப்போது அவர் அமர்ந்திருந்த சீட்டிற்கு பின்புறம் அமர்ந்திருந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சிலுமிஷத்தில். ஈடுபட்டதாக தெரிய வருகிறது இதை குறித்து அந்தப் பெண் குடியாத்தத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். புதிய பஸ் நிலையம் அருகே வந்தவுடன் அங்கு தயாராக இருந்த பெண்ணின் உறவினர்கள் சிலுமிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பிடித்து . தாக்குதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணைகள் .புது பேட்டை பகுதியை சேர்ந்த ஹேம்நாத் குமார் வயது 48 என்பது தெரிய வந்தது இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக