குடியாத்தம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் 51 . சேத்துவண்டை கிராமம் சென்னராயனபள்ளி பகுதியில் இன்று மாலை சுமார் 5 .00 மணி அளவில் மேற்படி கிராம சர்வே எண் 93 ல் உள்ள மரத்தில்  அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உள்ளார் என வனத்துறையினர் மூலம் தகவல் கிடைத்தின். பேரில்

குடியாத்தம் நகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை  செய்ததில் மேற்படி நபர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு இருக்கலாம் என தெரிய  வருகிறது .மேற்படி நபரின் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்தது. மேலும் அவருடைய ஆடை மற்றும் உடலின் சில அடையாளங்களை வைத்து மேற்படி நபரின் மகள் கூறியதின் பேரில் சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்த சாமு  த/பெ பால்ராஜ் ( வயது 73) என  தெரிய வருகிறது .   இறந்து விட்ட நபருக்கு முனியம்மாள் ( வயது 65 ) என்ற மனைவியும் நான்கு  மகள்களும் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டததது.

மேற்படி நபரின் பிரேதம் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!