தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை எந்த கொம்பனாலும் கட்ட முடியாது காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி!!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில் திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர். டிகே. சிவக்குமார் தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது என கேள்வி எழுப்பியதற்கு தமிழக சட்டசபையில் சொல்லியதையே நான் மீண்டும் நினைவுபடுத்தி கூறுகிறேன் தமிழ்நாட்டினுடைய முழு ஒப்புதல் இல்லாமல் எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாதுஅதுதான் தீர்ப்பு அந்தத் தீர்ப்பை படித்தவர்கள் இதுபோன்று பேச மாட்டார்கள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் கதை கேட்டுக் கொண்டு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல தயாராக இல்லை எனக் கூறினார்.
பேட்டி:துரைமுருகன் (திமுக பொதுசெயலாளர்)
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக