டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!!
தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!சென்னை: தமிழக காவல் துறையின் 34 வது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்ட நிலையில், காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பதவியேற்றார். தமிழகத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர். விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, காவல் துறையின் உச்சபட்ச பதவியில் நடத்தப்பட்டுள்ள முதல் முக்கிய அதிரடி மாற்றம் இதுவாகும். தற்போது தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக மகேஷ்குமார் அகர்வால் இந்த உயர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகளே நீடித்து வந்தனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தால் சந்தீப் ராய் ரத்தோர் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக