நத்தம் அருகே பிடிபட்ட 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஏரக்காபட்டியைச் சேர்ந்தவர் வைரவன் (50). இவரது தோட்டத்தில் வியாழன்கிழமை மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. உடன் இது குறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் குழுவினர் அப்பகுதியில் காணப்பட்ட மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். 8 அடி நீளம் இருந்த அந்த பாம்பை நத்தம் வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். அதை அவர்கள் அடர்ந்த கரந்தமலை மீதுள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
படவிளக்கம்: ஏரக்காபட்டியில் தனியார் தோட்டத்தில் உயிருடன் பிடிபட்ட மலைப்பாம்புடன் தீயணைப்பு துறை வீரர்கள்.
திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக