கோவையில் வளர்ச்சிக்கான 8 திட்டங்கள்!!

கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 3 வாரங்களாகிவிட்டன. மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது கோவை. கடந்த ஆட்சிகளில் கோவையின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரிய முக்கியத்துவம் வழங்கவில்லை. இந்நிலையில் தவெக ஆட்சியில் 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் வளர்ச்சிக்காக அடுத்தடுத்து 8 திட்டங்களை நிறைவேற்ற போவதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் இருந்தால் தான் அடுத்த 30 வருடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும். எல் அண்ட் டி புற வழிச்சாலை, ஜி.டி.நாயுடு மேம்பாலம் நீலாம்பூர் வரை திட்டங்களை நீட்டிப்பு செய்யவுள்ளோம். இந்த திட்டங்களில் சில சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளோம். கோவையில் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் மோசமாக உள்ளன. இந்த கட்டிடங்களை பழுது பார்க்க முடியுமா அல்லது இடித்து விட்டு புதிதாக கட்ட முடியுமா என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!