தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது தெரிவித்திருப்பதற்கு பாமக கட்சியினர் வரவேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தமிழக அரசு தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்து 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஆளுநர் உரையின்போது தெரிவித்துள்ளார்.
இதனை வரவேற்கும் விதமாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக கட்சியினர் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது ஆளுநர் தெரிவித்திருக்கும் சாதி வாரிய கணக்கெடுப்பிற்கு வரவேற்பை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக