தமிழகம் முழுவதும் 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை!!
46 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 37 லட்சம் பறிமுதல் பத்திரபதிவுக்கு வரும் பொதுமக்களிடம் ஏக்கர் மற்றும் கட்டுமானத்துக்கு தகுந்தாற்போல் ஆயிரம் மற்றும் லட்சகணக்கில் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில்.
தமிழகம் முழுவதும் 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
தற்போது அமைச்சர் தரப்புக்கு பத்திரப்பதிவுக்கு பணம் தர வேண்டாம் என்ற நிலையில் தொடர்ந்து சார்பதிவாளர்கள் ஆவண பதிவுக்கு லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக ஏராளமான புகார்கள் சார்பதிவாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் அனைத்து அலுவலகங்களுக்கும் திடீர் சோதனை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதன் பேரில் புகார்கள் உள்ளான அலுவலகங்களில் முதற்கட்டமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி உள்ளது.
இந்த சோதனையில் 37 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
சேலம் கிழக்கில் 3 லட்சமும், விருகம்பாக்கம், ஓட்டப்பிடாரம் அலுவலகத்தில் 2 லட்சமும், கொன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 84,000 செம்பியம் அலுவலகத்தில் 1.48 லட்சம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக