பேர்ணாம்பட்டு அருகே பாட்டி வீட்டில் இருந்த 6 வயது சிறுவன் தலை சிதைந்து, உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு! -சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டானா? என காவல்துறையினர் விசாரணை!!
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட் அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் - ஆஷா தம்பதியினர் திருமணமாகி கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் 6 வயது மகன் முகிலன் கடந்த 5 ஆண்டாக ஆஷாவின் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 40 நாட்களாக மேல்பட்டி ஆச்சாரியா தெருவில் உள்ள ராஜேஷின் தாய் விஜயா வீட்டில் பராமரிப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திடீரென சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வீட்டில் சடலமாக வைத்திருந்துள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் விஜயாவின் வீட்டில் இருந்ததே சிறுவன் உயிரிழந்த செய்திக்கு பின்தான் வெளியில் தெரியவந்துள்ளது என்றும், சிறுவனின் பாட்டி விஜயா மாந்திரீகம் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், வீடு முழுவதும் மாத்திரீகம் தொடர்பான பொருட்கள், தெருவில் உள்ள பொது கிணற்றில் மாந்திரீக பொருட்களை வீசுவது போன்ற தொடர் செயலில் ஈடுபட்டதாகவும். இந்நிலையில் அம்மாவாசையான நேற்று பலி கொடுத்திருக்கலாம் என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டாக குழந்தையை சிறு கீரல் கூட படாமல் வளர்த்து வந்தோம். பிரிந்து வந்த எனது மகளோடு சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து சென்றனர். எனது பேரனை நாங்க அனுப்ப மறுத்த போதும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். இடையில் பார்க்க கூட விடவில்லை போன் பண்ணா போனையும் எனது பேரனிடம் கொடுக்கவில்லை, நேற்று மாலை போன் பண்ணி எனது பேரன் முகிலன் கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக கூறினர். நாங்க போய் பார்த்த போது வீட்டில் சடலமாக கிடத்தியிருந்தனர். தலை நசுங்கி, உடலில் காயங்கள் இருந்தது இதனால் எனது பேரனை அடித்து கொலை செய்துள்ளார்கள் என புகார் அளித்துள்ளோம். எனது மகளையும் எதாவது செய்து விடுவார்களா என பயமாக உள்ளது. எனது பேரனுக்கு இதய பிரச்சனை இருந்தது உண்மை தான் ஆனால் அதற்கு சிகிச்சை பார்த்து சரி செய்து விட்டோம் அவனுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. சுவர் மீது ஏரி கீழே விழுந்ததில் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள் அதில் உண்மை இல்லை. ஆகவே எனது பேரனை அடித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மந்திரீகம் செய்பவர்கள் நேற்று அம்மாவாசை என்பதால் பலி கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம் ஆகவே அது குறித்தும் காவல் துறை விசாரித்து நடவடிக்கை வேண்டும் என கோரியுள்ளனர்.
இது தொடர்பாக குற்றச்சாட்டுக்குள்ளான விஜயாவின் மூத்த மகள் ரேவதி என்பரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக