கோவை விஜிஎம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் க்ளப் இணைந்து 6வது முறையாக கோவையில் ரன் பார் நேஷன் எனும் தலைப்பில், போதையில்லா கோவை என்ற விழிப்புணர்வை முன்வைத்து நேரு விளையாட்டு அரங்கில் 09.08.2026ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது!!


கோவை சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்து பணியாற்றி வரும் விஜிஎம் மருத்துவமனை, மற்றும் விளையாட்டுத் துறையில் நூற்றாண்டை கடக்கும் கோவை அத்லெடிக் க்ளப் இணைந்து ரன் பார் நேஷன் எனும் தலைப்பில் ஆண்டு தோறும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் 6வது ஆண்டை முன்னிட்டு வரும் 9ம் தேதி கோவை நேரு விளையாட்டு அரங்கில் போதையில்லா கோவை எனும் கரு பொருளின் கீழ், மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பலகை வெளியீட்டு விழா கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் மற்றும் சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் சுகுமார், சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கிரி பிரசாத், ஆகியோர் கலந்து கொண்டு விளம்பர பலகையினை வெளியிட்டார். தொடர்ந்து இது குறித்து விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் பிரசாத், விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுமன், மாரத்தான் விழா ஏற்பாட்டாளர்கள் விஜயகுமார், சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது.. 

ஒரு தேசம் முன்னேற கல்வி, விளையாட்டு, ஆரோக்கியம், ஆகிய மூன்றும் சிறப்பாக இருக்க வேண்டும், இதனை வலியுறுத்தி ஆண்டு தோறும் ரன் பார் நேஷன் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டிகள் நடத்த பட்டு வருகிறது. இந்த ஆண்டு போதையில்லா கோவை என்ற கரு பொருளின் கீழ் வரும் 9.08.2026 தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார், 5000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதையில்லா கோவைக்கு எதிராக ஓட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளுபவர்களுக்கான, சீருடை அறிமுக விழா நிகழ்ச்சியும் நடைபெற்றதாக தெரிவித்தனர். முன்னதாக மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீறுடைகள், மற்றும் காலனிகள், வழங்கப்பட்டதுடன் அரசு பள்ளிகளுக்கு கணீணிகள் வழங்கபட்டது. இறுதியாக பல்வேறு ரன்னர்ஸ் க்ளப் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது..

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!