கோவையில் துவங்கியது பிரேமம் இன் கல்யாண வைபோகம் திருமண சிறப்பு கண்காட்சி!இரு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ப்ரத்யேக டிசைன்களில் வண்ண வண்ண சேலைகள் காட்சிபடுத்த பட்டுள்ளது!!
கோவை மாவட்டம்,இந்திய திருமணங்களில் பாரம்பரிய செழுமை, இந்திய நெசவு துணிகளின் காலத்தால் அழியாத அழகு மற்றும் நவீன பெண்மையின் முக்கியத்துவத்தை முன்னிருத்தும் வகையில், தொழில்முனைவோரான ஸ்வர்ணமுகி ரகுபதி நடத்தும், பிரேமம் சில்க்ஸ் நிறுவனத்தின் சிறப்பு திருமண தொகுப்பு கண்காட்சியான பிரேமம்-இன் கல்யாண வைபோகம் எனும் தலைப்பில் ஜுன் 15, மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியின் துவக்கவிழா கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ரெசிடென்சி டவர் உணவகத்தில் நடைபெற்றது இதனை பிரிக்கால் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் சிறுதுளி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மற்றும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தரணி கலிங்கராயரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வனிதா மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
பெண்களின் அழகு, ஆற்றல் தணித்துவத்தை கொண்டாடும் வகையில் பிரேமம் சில்க்ஸ் கல்யாண வைபோகம் கண்காட்சி நடத்த பட்டு வருகிறது. இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருமண சேலைகள் கண்காட்சி படுத்த பட்டு விற்பனைக்கு வைக்க பட்டுள்ளது. இங்கு பந்தினி பைதானி சேலைகள், ஆர்கன்சா எல்லைகளுடன் நெய்யப்பட்ட பனாரஸ் பட்டு சேலைபள், உள்ளிட்ட பல்வேறு சேலைகள் காட்சிபடுத்த பட்டுள்ளது. இவை அனைத்தும் இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் புதுமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பிரேமம் சில்க்ஸ் நிறுவனர் ஸ்வர்ணமுகி ரகுபதி கூறுகையில்..
பிரேமம் சில்க்ஸ் என்பது ஒரு வணிக நிறுவனம் மட்டுமில்லாமல், இது ஒரு உணர்வாக பார்க்க படுகிறது, பெண்ணின் உள்ளார்ந்த தெய்வீகத்தை கொண்டாடும் முயற்சி யாக உருவாக்க பட்டுள்ளது. பாரம்பரியம் கைவினைத்திறன் மற்றும் உணர்வுகளை தாங்கிய ஒவ்வொரு நெசவு துணியும், பெண்களுக்கு அழகு தன்னம்பிக்கையுடன் கூடிய உணர்வை அளிக்கும் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்தார்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக