கமலுக்கு 4 படம், ரஜினிக்கு 2 தான்; பாரதிராஜா சூப்பர் ஸ்டாருடன் அதிக படங்கள் பண்ணாத காரணம் இதுதான்!!

16 வயதினிலே படத்திற்கு பிறகு, ரஜினிகாந்துடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே பாரதிராஜா இணைந்திருந்தார். கொடி பறக்குது என்ற பெயரில் வெளியான அந்த படம் தோல்வியை சந்தித்தது. 

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜாவின் மரணம் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரது ஞாபகங்கள் குறித்து தங்களது வருத்தைத்தையும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதி கண்ணன் ரஜினிகாந்த் –பாரதிராஜா குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். 

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே அப்போது வளர்ந்து வரும் நட்சத்திரங்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து இயக்கி வெற்றி கண்ட பாரதிராஜா, அதன்பிறகு தான் இயக்கிய கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, புதிய வார்ப்புகள் என அனைத்து படங்களிலும் புதுமுகங்களை அறிமுகம் செய்தார். 

தனது திரை வாழ்க்கையில் பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் என்றாலும், தனது முதல் படமாக 16 வயதினிலே படம் மட்டும் இல்லாமல் கமல்ஹாசனுடன், டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி என 4 படங்களில் இணைந்துள்ளார். ஆனால் 16 வயதினிலே படத்திற்கு பிறகு, ரஜினிகாந்துடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே பாரதிராஜா இணைந்திருந்தார். கொடி பறக்குது என்ற பெயரில் வெளியான அந்த படம் தோல்வியை சந்தித்தது. 

பாரதிராஜா இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்த் கூட அவருக்கு என் படங்கள் பிடிக்காது ஆனால் என்னை ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருந்தார். இது குறித்து இயக்குனர் பாரதிகண்ணன் கூறுகையில், பாரதிராஜா ரஜினிகாந்தின் முகத்திற்கு நேராக எதையும் சொல்லிவிடுவார். அவரிடம் என்னயா இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரா இருக்க எப்போ பார்த்தாலும், ஆக்ஷன், அடி தடினு பண்ணிட்டு இருக்க? பெரிய கலைஞரான வேதம் புதிது படம் மாதிரி நீ பண்ணணும்யா என்று சொன்னார். 

ரஜினிகாந்த் அப்படி நடித்தால் ஓடாது என்று அவருக்கே தெரியும். ஆனால் அவரையும் வைத்து கொடி பறக்குது என்ற படத்தை எடுத்தார் பாரதிராஜா. அந்த படமும் ஓடவில்லை. ஆனால் இவர் தனது எண்ணத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். ரஜினிகாந்த் ஒரு கலைப்படம் பண்ண வேண்டும் என்று பாரதிராஜா விரும்பினார் என்று கூறியுள்ளார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!