கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி கோவை பந்தயசாலையில் உள்ள ஐடிசி வெல்கம் உணவகத்தில் துவங்கபட்டது!!

கோவை மாவட்டம்,கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சியை நடத்துகிறது. உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியை, தனிஷ்க் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களே தொடங்கி வைத்தனர்.

இயற்கை வைர நகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, ஜூன் 19 முதல் 21,ம் தேதி வரை, கோவை பந்தயசாலையில் உள்ள ஐடிசி வெல்கம் உணவகத்தில், நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, நேர்த்தியான கைவினைத் திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் உயர்மதிப்புடைய இயற்கை வைரங்களின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன்  கலெக்‌ஷன்’ பாரம்பரிய அழகையும், காலத்தால் அழியாத மதிப்பையும் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தை விரும்பும் மணமகள்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தொகுப்பு அமைகிறது. 

கண்காட்சியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வைர மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், உங்கள் பழைய தங்கத்தை எந்த நகைக்கடையில் வாங்கப்பட்டிருந்தாலும் 9 காரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளுக்கு 0 சதவீத கழிவு சலுகையுடன் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியினை தனிக்ஷ் பிரைவேட்  லிமிடெட்டின் நகைப் பிரிவு பிராந்திய கிளஸ்டர் மேலாளர் சந்தோஷ், தனிஷ்க் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!