நத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருடிய வழக்கு! ஒருவர் கைது!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (42) . இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டில் மனைவி பவித்ரா வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு பவித்ரா அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்குள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 36 1/2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வம், உதவி ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட குழுவினரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் இங்கும் அங்குமாக சுற்றித் திரிந்துள்ளார். அவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்த போது தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (28) என்பது நத்தம் கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் என்பதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மனோஜ் உட்பட இருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக