சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார் . சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். முதல்முறையாக ட்ரோன் ரோந்து அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்: விஜய்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; கண் கலங்குகிறது; பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு காரணம், போதைப்பொருள் நடமாட்டம்தான்

போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்; பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது.

பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது.

உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டுக்கு முக்கியமல்ல; பெண்கள் பாதுகாப்பும் முக்கியம்; பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் ஒரு அரசின் வெற்றி உள்ளது.

- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் விஜய் பேச்சு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!