நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!!
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விஜய் விரிவாகப் பேசியிருந்தார். குறிப்பாக மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்போடு செயல்படத் தமிழக அரசு தயாராக இருப்பதாகக் கூறிய முதல்வர் விஜய், நீட் தேர்வு விலக்கு குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.நிதி ஆயோக் கூட்டம் இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்கத் தமிழ்நாடு முதல்வர் விஜய் நேற்றைய தினமே டெல்லி சென்றிருந்தார். நேற்று அவர் குடியரசுத் தலைவர் முர்மு, துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்திருந்தார். இதற்கிடையே இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் நீட் விலக்கை வலியுறுத்தினார்.
கோயம்புத்தூர் செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்

கருத்துகள்
கருத்துரையிடுக