குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 05.06.2026 அன்று முதல் தொடங்க உள்ளது. இக்கல்லூரியில் முதலாமாண்டு சுழற்சி I மற்றும் II சேர்க்கைக்கான 1,358 இடங்கள் உள்ளன. முதற்கட்ட கலந்தாய்வு கீழ்காணும் நாட்களில் துறைவாரியான நடைபெற உள்ளது.

05.06.2026 : சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு  :

விளையாட்டு மற்றும் தேசிய படையில் சிறப்பிடம் பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், படைவீர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்கள். 

08.06.2026

: இளங்கலைத் தமிழ் B.A. Tamil  Shift – I (T/M),

ஆங்கிலம் B.A. English Shift – I – (E/M) 

50 மதிப்பெண்கள் முதல் 100 மதிப்பெண்கள் வரை 

(சம்மந்தப்பட்ட பாடப்பிரிவு தமிழ்/ஆங்கிலம்) பெற்றிருக்க வேண்டும் மற்றும் 

B.Sc. Maths, Shift – I & II (T/M, E/M)

(கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 400 வரை)

09.06.2026 : அனைத்து அறிவியல் பாடப்பிரிவு 

கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 400 வரை

B.Sc. Physics, Shift – I (T/M, E/M),

B.Sc. Chemistry, Shift – I & II (T/M, E/M),

B.Sc. Botany, Shift – I & II (T/M, E/M),

B.Sc. Zoology, Shift – I (T/M, E/M), 

B.Sc. Computer Science Shift – I & II (E/M),

BCA Shift – I & II (E/M)

10.06.2026 : வணிகவியல் B.Com Shift - I, (E/M), Shift – II (T/M, E/M),

மற்றும் வணிக நிர்வாகவியல் BBA Shift – I & II  (E/M)

கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 400 வரை

11.06.2026 : வரலாறு B.A., History - Shift – I (T/M)

 மற்றும் பொருளியல் B.A., Economics Shift – I & II (T/M, E/M),  

கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 400 வரை

தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடம் தவிர்த்து பிற பாடங்களில் எடுத்துள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகை 200-க்கும் மேல் உள்ள மாணவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி உடையோர் ஆவர்.

1. இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம், 

2. மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்/ 

3. 10, 11, 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல்  

4. ஆதார் அட்டை

5. சாதி சான்றிதழ்

6. கடவுச்சீட்டு அளவு புகைப்படம் – 2

மேற்குறிப்பிட்ட ஆவணங்களை கலந்தாய்வில் பங்குபெறும் மாணாக்கர்கள் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். இக்கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதலின்படி, இடஒதுக்கீட்டின் மூலம் பின்பற்றி முறையாக நடைபெறும் என தெரிவிக்கலாகிறது.

தகுதி மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவியர் அசல் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பித்து, சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின் படி, கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

-முதல்வர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!