20 ரூபாய் மதிப்புள்ள ஐஸ்கிரீம் சாப்பிட்டதால், மாதம் 50,000 ரூபாய் சம்பளம் தரும் வேலையை இழந்த சுரேஷ் குமார்!!



இவர்தான் போலீஸ் கான்ஸ்டபிள் சுரேஷ்குமார்:

20 ரூபாய் மதிப்புள்ள ஐஸ்கிரீம் சாப்பிட்டதால், மாதம் 50,000 ரூபாய் சம்பளம் தரும் வேலையை இழந்தவர் சுரேஷ் குமார்..! 

எப்படி என்று கேட்கிறீர்களா? 

சிலருக்கு தங்களது சொந்த பணத்தை செலவிடவே விருப்பமிருக்காது.

ஒவ்வொரு மாதமும் நல்ல சம்பளம் கிடைத்தாலும், மற்றவர்களை ஏமாற்றி இலவசமாகப் பொருட்களைப் பெறுவதில்தான் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடாபூர் பகுதியைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் Suresh Kumar அப்படிப்பட்டவராக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

போலீஸ் பணியில் இருந்த சுரேஷ் குமாருக்கு ஐஸ்கிரீம், குல்ஃபி, கோல்கப்பா போன்ற உணவுகள் மிகவும் பிடித்தமானவை.

பணியின் இடைவேளைகளில் அவற்றை அடிக்கடி வாங்கிச் சாப்பிடுவாராம்.

ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது… அவற்றை அவர் தனது சொந்த பணத்தில் வாங்குவதில்லை. 

தெருவோர விற்பனையாளர்களிடமிருந்து கோல்கப்பா, குல்ஃபி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கிய பிறகு, அதற்கான பணத்தை செலுத்தாமல் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.

விற்பனையாளர்கள் பணம் கேட்டால், தனது அதிகாரப் பதவியை பயன்படுத்தி மிரட்டியதோடு, அவதூறாகவும் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒரு விற்பனையாளர், சுரேஷ் குமாரின் இந்த நடத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது.

பின்னர் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து, கான்ஸ்டபிள் சுரேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், விரிவான துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டது.

சுரேஷ் குமாரின் நிலையை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்…

வெறும் 20 அல்லது 30 ரூபாய் செலவழிக்காமல், மற்றவர்களை ஏமாற்றி இலவசமாக சாப்பிட முயன்றதால், மாதம் சுமார் 50,000 ரூபாய் சம்பளம் தரும் அரசு வேலையையே இழக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். 

நேர்மையை விட பெரிய சொத்து எதுவும் இல்லை என்பதை நினைவூட்டும் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!