திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 17-ல்: ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை!!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் ஜூன் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக எம்எல்ஏக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக