ஆர்,.டி.இ என்ற பெயரில் அரசிடம் இருந்தும் பெற்றோர்களிடமும் 175 சதவீதம் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு!!

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம்  மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் ஆர்டி இ என்ற பெயரில் கல்வி கட்டணம் 25 சதவீதம் வறுமையில் உள்ள ஏழை மாணவ மாணவியர்களுக்கு கட்டணம் இல்லா கல்வி வழங்க அரசு ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்கிறது ஆனால் அதனை தனியார் கல்வி நிறுவனங்கள் மறைத்து கல்வி கட்டணத்தில் 25 சதவீதம்தான் இலவசம் என பெற்றோர்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் ஆர்டி இ ல் உள்ள மாணவர்களுக்கு அரசாங்கம் முழு தொகையை கட்டிவிடும் நிலையில் பெற்றோர்களிடமும் 75% பணத்தை வசூல் செய்கிறது ஆக மொத்தம் அரசிடம் 100% பணத்தை பெற்றுக் கொண்டும் அதேபோல பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடமும் 75 சதவீதம் பணத்தைப் பெற்றுக் கொண்டும் தனியார் பள்ளியில் கட்டண பள்ளியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே இது போல மோசடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு ஆய்வு செய்து பள்ளியின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேட்டி:சுரேஷ்குமார் (சமூக ஆர்வலர்)

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!