குடியாத்தம்: 16 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த குறுக்கு சாலையை மீண்டும் திறக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியரக காயிதே மில்லத் கூட்ட அரங்கம், திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பேரணாம்பட்டு பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு, பேரணாம்பட்டு தாலுகா, பரவக்கல் ஊராட்சியில் ராஜாமந்திரிப்பட்டி – கிடங்கு ராமாபுரம் இடையேயான குறுக்கு சாலை கடந்த 16 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, தனியார் பட்டா நிலம் எனக் கூறி சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டி, மண் மற்றும் கற்களை கொட்டி போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாலை வழியாக பள்ளி வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள், விவசாய வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தனர். 

மேலும் பரவக்கல், பொகளூர், பல்லாலகுப்பம், செம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மக்கள் மொரசப்பள்ளி பகுதியில் உள்ள வங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த சாலையையே பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையை மூடப்பட்டதால் கர்ப்பிணிப் பெண்கள், அவசர மருத்துவ சேவைகள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது மாற்று வழியாக சுமார் 12 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை சாலை திறக்கப்படாததால் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சாலை அமைப்பதற்காக சுமார் 30 விவசாயிகள் எந்தவித இழப்பீடும் எதிர்பார்க்காமல் தங்களது பட்டா நிலங்களை வழங்கியுள்ளதாகவும், அரசின் நிதியில் இரண்டு முறை தார்சாலை அமைக்கப்பட்டதுடன், தடுப்புச் சுவர், மின்கம்பங்கள் மற்றும் குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு குறுக்கு சாலையை மீண்டும் நிரந்தரமாக திறந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே வி ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!