தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், 15 நாட்களுக்குள் கடையை காலி செய்வதாக டாஸ்மாக் நிர்வாகம் உறுதி! தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!!
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயல்பட்டு வருகின்து. இதன் மாநில தலைவராக வழக்கறிஞர் சக்தி வேல் இருந்து வருகின்றார். இவரது தலைமையில்
கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு இக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது., கோவை கோவில் மேடு பகுதியில் பேருந்து நிலையம் அருகே, 100 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த கடைக்கு அருகே ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது இந்த கடையால் பல்வேறு நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகின்றது எனவே இந்த கடையை உடனடியாக அரசு மூடி, இடமாற்றம் செய்து பொதுமக்கள், மற்றும் மருத்துவமனை நோயாளிகளை காக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடுத்த வரும் 15ம் தேதி கோவில் மேடு பகுதியில், உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்த படும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி அறிவிப்பு விடுத்திருந்தது. இது சம்பந்தமாக டாஸ்மாக் மண்டல மேலாளர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க பட்டது. இந்த மனுவை விசாரித்த டாஸ்மாக் மண்டல மேலாளர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக விடுக்க பட்ட கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்க்காக 15 நாட்கள் கால அவகாசம் தேவை என கடிதம் மூலம் பதில் தெரிவித்துள்ளது இதனால் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க பட்டுள்ளது. 15 நாட்களில் டாஸ்மாக் கடை மாற்றம் செய்யாத நிலையில் மீண்டும் போராட்டம் நடத்த படும் என்று தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தா செல்வராஜ், குனியமுத்தூர் இ-சேவை மையம் சார்பாக மோகன், மேட்டுப்பாளையம் தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், அதிமுக முன்னாள் வட்டச்செயலாளர் மோகன் காந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக