கன்னியாகுமரியில் 150 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நாளை மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!!


கன்னியாகுமரியில் 150 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நாளை மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சுற்றுலா தலமான கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் 150 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி கடற்கரை பகுதி, சன்னதி தெரு, படகு துறை, ராத வீதிகள், மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இவற்றை கண்காணிப்பதற்காக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் நவீன கண்காணிப்பு அறையும் அமைக்கப் பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு அமைப்பை நாளை காலை 10 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் Iதொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொள்கின்றனர்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!