ரூ.13.18 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கை வெளியீடு!!
தமிழ்நாட்டின் தற்போதைய கடன் ரூ.13.18 லட்சம் கோடி என நிதியமைச்சா் மாிய வில்சன் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை முழுமையான ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது, ரிசர்வ் வங்கி, சிஏஜி போன்றவற்றின் தரவுகள், ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி:
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் வட்டிச் செலவீனம் 22.8 சதவீதம்; தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதம் தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி; திமுக ஆட்சியில் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 1,28,934 ரூபாயாக உள்ளது!
மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது"
வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளது.
இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்ச அளவாகும்
அன்றாட நிர்வாக செயல்பாடுகளை சமாளிக்கவே கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
அமைச்சர். மரிய வில்சன்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக