இலுப்பூர் மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா!!


புதுக்கோட்டைமாவட்டம், இலுப்பூர் தாலுகா, மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13 வது பட்டமளிப்புவிழா நடைபெற்றது. கல்விக் குழும நிறுவனர் முனைவர் இரா. சின்னத்தம்பி அவர்கள் தலைமையிலும், கல்விக் குழுமத் தாளாளர் திருமிகு. ஆர்.சி.உதயகுமார் அவர்கள் முன்னிலையிலும் பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது. இதில்தமிழ், ஆங்கிலம், வேதியல், இயற்பியல், கணிதம், வணிகவியல் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய துறைகளில் பயின்ற மாணவர்கள் சுமார் 200 பேர் பட்டங்களைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மா, நல்லதம்பி ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரையாற்றி துவக்கி வைத்தார். விழாவில் கல்விக் குழுமத் தாளாளர்  ஆர்.சி.உதயகுமார் பட்டம் பெற்ற மாணவர்களிடம், உங்களின் கடின உழைப்பு மட்டுமே உங்களுடைய வாழ்வை உயர்த்தும் என்றும் வாழ்க்கை என்பது கடல் போல அதில் சிலர் கால்நனைப்பர், சிலரோ மீன்பிடிப்பர்,சிலரோ ஆழ்கடல் மூழ்கி முத்தெடுப்பர் நீங்கள் எவ்வகை படுபவர்கள் என தீர்மானித்து முத்து எடுப்பவர்களாக மதர் தெரசா மாணவர்கள் இருக்க வேண்டும் என்கின்ற தன்னுடைய ஆவலையும் எடுத்துக் கூறினார். கல்வி குழும இயக்குநர் முனைவர் திருமா. பூங்குன்றன் ஐயா வாழ்த்துரை வழங்கினார். மேலும் பதிவாளர் பேராசிரியர் மு. தினேஷ் குமார் மதர் தெரசா கல்வி நிறுவனத்தின் மேன்மையை எடுத்துரைத்தார். 


இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முனைவர். P. மணிசங்கர் மேனாள் துணைவேந்தர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் திறமை உடையவர்களாகவும், ஒவ்வொருவரும் கற்றலைத் தொடர வேண்டும் என்பதையும் இந்திய திருநாட்டின் தொன்மை குறித்தும் அறிவியல் துறையில் அதன் பங்களிப்பு குறித்தும் பண்டைய காலத்தை அறிவியலில், வியலில், அகத்தியரும், அகத்தியரும், ஆரியபட்டாவும் ஆரியபட்டாவும் ராமானுஜமும் ஆற்றிய அளப்பரிய சேவை குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்து விழா பேருரையற்றி  பட்டங்களை வழங்கினார். விழா நிகழ்வுகளை  ஆங்கிலத் துறைத்தலைவர் பேராசிரியர்  சந்திரசேகர் தொகுத்து வழங்கினார். துணைமுதல்வர் முனைவர். ஜே. சாமுவேல் சீசர் பிக்கின்ஸ் அவர்கள் நன்றியுரை கூற, இவ்விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!