சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்க விழாவில் தவெகவினர் 1200 பேருக்கு அனுமதி!!
* மற்ற முதல்வர்கள் செய்யாததை செய்யும் முதல்வர் விஜய் :
* எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதிகாரிகள் பேச்சை கேட்க மறுத்ததால் அதிர்ச்சி:
* கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தவிர்த்து மற்றவர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை.
* ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் போன்ற முதல்வர்கள் போலீசார் நிகழ்ச்சியில் தனது தொண்டர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை.
* ஆனால் செவ்வாய்க்கிழமை நாளை மாலை 5 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திங்கப் பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 1200 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது.
* முதல்வர் விஜய் துவக்கி வைக்கும் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்கின்றனர். போலீஸ் அதிகாரிகள் இது போன்ற விழாவில் தொண்டர்களை அனுமதிக்க வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
* நாளை நடைபெறும் விழாவில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெறுகிறது. முதல்வருக்கு மரியாதை செலுத்தும் இந்த அணிவகுப்பில் கட்சியினர் விசில் அடித்து ஆரவாரம் செய்வார்கள்.
* அப்படி அவர்கள் ஆரவாரம் செய்யும் சமயத்தில் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் போலீருக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படும்.
* மேலும் போலீசார் நிகழ்ச்சியில் கட்சியினர் உற்சாகத்தில் செய்யும் ஒவ்வொரு வேளையும் போலீசாருக்கு மிகுந்த சிரமத்தை தரும்.
* எனவே மற்ற முதல்வர்கள் போன்று விஜய் அவர்களும் போலீசார் நிகழ்ச்சியில் தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக