கோவையில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த மணிகண்டன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு!!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் வசந்த் குமார். இவர் பாதிக்கபட்ட பொதுமக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து இது குறித்து கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்பொழுது... வசந்தகுமார் கூறியதாவது..
ரியல் எஸ்டேட் துறையில் வீரபாண்டி பகுதியில், ஆர். எம் கார்டன், என்ற பெயரில், முதலீடு செய்து அதிக லாபம் பெறுங்கள் என்று பொதுமக்களிடையே விளம்பரம் செய்து பல கோடி மோசடி செய்ததாக மணிகண்டன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களும், இணைந்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுக்களாக வழங்க உள்ளதாகவும், மாபெரும் பண மோசடி குறித்து பாதிக்கப்பட்ட, எங்களுக்கு நிதி கிடைக்க வேண்டியும், சட்டபூர்வமான நடவடிக்கையை அரசு எடுத்து எங்களுக்கு, பணத்தை இழந்த எங்களுக்கு பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக