நவீன CCTV கேமரா குற்றச் சம்பவ கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார்!!
தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (04.06.2026) புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன CCTV கேமரா குற்றச் சம்பவ கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார்.தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட காவல்துறை தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 450 CCTV கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது, அதில் முதற்கட்டமாக தற்போது 60 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு 24x7 நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.
இக்கேமராக்கள் மூலம் முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.இந்த நவீன கண்காணிப்பு அமைப்பு மூலம் குற்றத் தடுப்பு, மற்றும் குற்றவாளிகளை கண்டறிய,சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து சீர் செய்ய உள்ளிட்ட காவல்துறையின் பணிகள் மேலும் திறம்பட செயல்படுத்தப்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும்.
தேனி மாவட்ட சிறப்பு செயதியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக