ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்.S.M.சுகுமார் MLA !!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்.S.M.சுகுமார் MLA அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்.  ஜெ.யு.சந்திரகலா (இ.ஆ.ப.,) அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து  

1. ஆற்காடு நகரத்தில் தற்காலிகமாக உள்ள காய்கறி மார்க்கெட்டை நிரந்தர கடைகளாக அமைத்து தர வலியுறுத்தினார். 

2. ஆற்காடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதால் அவர்களுக்கு நிரந்தரமான நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தினார். 

3. திமிரி ஒன்றியம் வரகூர் பட்டணம் கிராம மக்களுக்கு 30,000 லிட்டர் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வலியுறுத்தினார். 

4. ஆற்காடு ஒன்றியம் பெரிய குக்குண்டி சின்ன குக்குண்டி ஏரிக்கரை அகலம் பாப்பேரி ஆகிய கிராமங்கள் இணைக்கும் பஸ் வசதி மற்றும் இசையனூர் பெருங்கால் மேடு ஆகிய கிராமங்களை இணைக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தினார்.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு கோரிக்கை மணு வழங்கி உடனடி தீர்வு காண வலியுறுத்தினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!