ராணிப்பேட்டையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா!!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இன்று (15.05 2026) ஆயுதப்படை தலைமையகம் அருகிலுள்ள சென்னை – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் “Single Pole Solar Blinkers” அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின், இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும், மாவட்டம் முழுவதும் புதிதாக கண்டறியப்பட்ட சுமார் 51( Accident  Hotspot Areas)பகுதிகளில் இந்த அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.

இந்த அமைப்புகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சுடராக செயல்பட்டு, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும், சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர். கனகராஜ், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!