தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர்.S. ஜுலியட் அத்தோணி அவர்களின் வாழ்த்துச் செய்தி!!
தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு ஏற்க இருக்கும் மாண்புமிகு மக்கள் தளபதி C ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவர்களோடு பதவி ஏற்க இருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் அரசு அலுவலர்களுக்கு தனியாக நலவாரியம், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவது , தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம், பதவி உயர்வு பணியிட மாறுதல் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை, எட்டாவது ஊதிய குழுவை காலதாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்றுவது போன்ற பொது கோரிக்கைகளும், காவல்துறை நண்பர்களுக்கு தனி கோரிக்கைகளும் , அங்கன்வாடி பணியாளர்கள் பணியாளர்களுக்கு டி-கிரேடு ஊதியம், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பல்நோக்கு பணியாளர்களை ஐந்தாண்டு காலம் பணியாற்றிய பணியாளர்களை பணிவரம் செய்திடுவோம் ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக சம வேலைக்கு சம ஊதியம், கற்றல் கற்பித்தல் அல்லாத பணிகளில் பணிபுரிவதில் இருந்து விலக்களித்தல் , நுண்ணறிவு பயிற்சி, வெளிநாட்டு பயிற்சி,காலி பணியிடங்களை நிரப்புதல் , தூய்மை பணியாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகள், காவல்துறை நண்பர்களுக்கு எண்ணற்ற சலுகைகள், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமைகள், பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் முழுமையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்துதல் அது மட்டுமல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் மாநிலத்தின் முன்னேற்றம் , வேலு நாச்சியார் படை, இலவச கல்வி, அஞ்சலை அம்மாள் நீதிமன்றங்கள், மகளிர் முன்னேற்றம் மாநிலத்தின் முன்னேற்றம் என்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து அதன்படி மக்களிடம் நன்னம்பிக்கையை பெற்று தமிழ்நாட்டில் பெருவாரியான தொகுதிகளை பெற்று தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு தகுதி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் சார்பாக நன்றியை தெரிவிப்பதுடன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மாண்புமிகு இளைய தளபதி சி ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று நல்லாட்சி மலர்ந்திட நூற்றாண்டுகள் கடந்த முதன்மை சங்கம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 165 இணைப்புச் சங்கங்கள் மாநில மையம் மாவட்ட மையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்.
S. ஜூலியஸ் அந்தோணி,
மாவட்டத் தலைவர்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
தூத்துக்குடி மாவட்டம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக