சென்னை மாநகரக் காவல் ஆணையராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்! ஏ. அமல்ராஜ் IPS!!

தமிழக அரசின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஏ. அமல்ராஜ், இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னை மாநகரக் காவல் ஆணையராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். 

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காலை 8.30 மணியளவில் கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் பதவியேற்றுக் கொண்ட இந்த எளிய நிகழ்வின் போது, காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். 

சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு (ராஜ் பவன்) விரைந்த அமல்ராஜ், அங்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏ.எம். ஷாஜகான் ஆகியோரின் பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  முன்னதாக, வியாழக்கிழமை நள்ளிரவில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்ட அதிரடி இடமாற்ற உத்தரவில், அதிகாரிகள் அனைவரும் உடனடியாகப் பொறுப்பேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!