விடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்!!

கடலூர் மாவட்டம், வடலூரில் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள விடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், வடலூரில் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள விடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

கடந்த 13.3 .2026 அன்று 

விடியல் இலவச தையல் பயிற்சிக்கான அலுவலகம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களால் திறக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பயிற்சிக்கு தயார் நிலையில் உள்ள சுமார் 160 பெண்களிடம் இலவச  பயிற்சி

வகுப்புகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் இன்று பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது விடியல் தீர்த்தனகிரி டாக்டர் எல் எஸ் ஆர் கோவிந்தராஜ் தலைமையில் 

விடியல் ஜே பி என்கிற ஜெயபிரகாஷ்  , மாணிக்கவேல் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விடியல் சகாயமேரி வரவேற்பு வழங்கினர் 

இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்து கொண்டு வகுப்பினை தொடங்கி வைத்து பேசுகையில் மகளிர் தங்களுக்கான தனித் திறமையில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு கவலை இல்லாமல் வாழ பழகி சிங்கப்பெண்களாக வீட்டிற்கு நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக சொந்த காலில் நிற்க வேண்டும் வளர வேண்டும் என்றார் 

விடியல் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சவுரிராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற துவக்க விழாவில் விடியல் தையல் அட்மினல் வருவாய் ஷர்மிளா நன்றி உரை வழங்கினார்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!