சமூக ஊடகங்களில் பரவும் போலியான விஜயின். ID card-ன் புகைப்படம்!!
லயோலா கல்லூரியில் முதல்வர் விஜய் படித்தபோது கொடுக்கப்பட்ட ID card-ன் புகைப்படம் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் போலியானது.
AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை தவறாகப் பரப்பி வருகின்றனர். மேலும் இதில் கல்லூரியின் பெயர் லயோலல் கல்லூரி என்று உள்ளது.
லயோலா கல்லூரியில் “B.Sc. (Visual Communication)” என்ற படிப்பே உள்ளது. ஆனால் இதில் “B.A. (Visual Communication)” என்று தவறாக உள்ளது.
இதே போன்று அவர் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு 1996 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 1996 ஆம் ஆண்டுக்குள் அவர், நாளைய தீர்ப்பு (1992), செந்தூரப்பாண்டி (1993), ரசிகன் (1994) உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக